சாந்தனை அழைத்துவர ஜனாதிபதி பரிந்துரை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் கோரிக்கையை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி விரைவாக அதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சரிடம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.