சிவில் பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் – எதிர்க்கட்சித் தலைவர்
தமது அரசாங்கத்தின் கீழ், அனைத்து சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கும் முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் அர்ப்பணிப்பை பலர் மறந்துவிட்டனர். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து வெளியேற விரும்புவோருக்கு நியாயமான இழப்பீடும், உரிய மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
சேவையில் தொடர்ந்தும் இருக்க விரும்புபவர்களுக்கு தனியான அணுகுமுறை ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.