Home » சீன முதலீட்டுத் திட்டம் ரத்து! சஜித் விடுக்கும் எச்சரிக்கை

சீன முதலீட்டுத் திட்டம் ரத்து! சஜித் விடுக்கும் எச்சரிக்கை

Source

இலங்கையிலிருந்து பாரிய சீன முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், HSBC நிறுவனத்தின் சேவை மையமும் நாட்டிலிருந்து வெளியேறக்கூடும் என்ற தகவல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் முன்னெடுக்கப்படவிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனாவின் (China Merchants Port Holdings) நிறுவனம் விலகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி ஹொங்கொங் பங்குச் சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிவிப்பில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை துறைமுக அதிகாரசபை சுமார் 21.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை தீர்வுத் தொகையாகச் செலுத்த இணங்கியுள்ளது.

இதேவேளை, HSBC உலகளாவிய சேவை மையம் பிலிப்பைன்ஸுக்கு இடமாற்றம் செய்யப்படலாம் எனவும் சஜித் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை இடம்பெற்றால், 3,000 நேரடி மற்றும் 500 மறைமுக தொழில் வாய்ப்புகள் இழக்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார். இந்த இடமாற்றம் 2027 டிசம்பருக்குள் நிறைவடையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், HSBC தொடர்பான தகவல்கள் உண்மையாக இருக்கக்கூடாது எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக முதலீட்டாளர்கள் வெளியேறும் நிலைமை இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

The post சீன முதலீட்டுத் திட்டம் ரத்து! சஜித் விடுக்கும் எச்சரிக்கை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both