சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலா மையங்களுடன் இயற்கை வளங்களை ஒருங்கிணைக்கும் சுற்றுலாத் துறையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தங்காலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் மும்மடங்கு அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா தொற்று மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் சரிவு என்பவற்றால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உரங்களை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
QR குறியீட்டைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு துறைகளில் ஈடுபடும் மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்கும் அதே வேளையில் விவசாயக்கடன் அறவிடப்படாது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.