இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தகவலின்படி, ஜூன் மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக மொத்தம் 138,241 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 10% வீழ்ச்சியாகும்.
ஜூன் மாதத்திலும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 43,423 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, கடந்த ஜூன் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,474 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,710 பேரும், சீனாவிலிருந்து 8,224 பேரும், அமெரிக்காவிலிருந்து 3,806 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மே மாதத்தில் 145,745 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 1,146,573 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில், இந்தியாவிலிருந்து 293,683 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 108,567 பேரும், ரஷ்யாவிலிருந்து 77,349 பேரும், சீனாவிலிருந்து 76,171 பேரும் இடம்பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
The post சுற்றுலா பயணிகள் வருகை வீழ்ச்சி appeared first on LNW Tamil.