Home » நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு

Source

நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலக் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் காற்றுத் தரச் சுட்டெண் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவிக்கையில், வடக்கு, வடமத்திய, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காற்றுத் தரச் சுட்டெண் 200ஐ விட அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய குழப்பமான காலநிலை காரணமாக, எல்லை தாண்டிய காற்று சுழற்சியின் ஊடாக காற்று மாசுபடுத்தும் துகள்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சில பகுதிகளில் வெளிப்புறச் சூழலில் பனிமூட்டம் போன்ற தோற்றம் காணப்படுவதாகவும், அவ்வாறு தெரிவது வளிமண்டலத்தில் காணப்படும் தூசு மற்றும் ஏனைய மாசுத் துகள்களே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய தரவுகளின்படி, இந்த நிலைமை மேலும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், நிலவும் காலநிலைக் குழப்பங்கள் மற்றும் காற்று சுழற்சி முறைகளால் இதனைத் துல்லியமாகக் கணிப்பது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வயதானவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வளிமண்டலத்தில் காணப்படும் தூசுத் துகள்களால் ஒவ்வாமை ஏற்படக்கூடியவர்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இவ்வாறான நபர்களுக்கு ஒவ்வாமை அல்லது சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both