சூடான் யுத்தத்தினால் ஏற்படும் சேதங்கள் அதிகரிப்பு
சூடானில் தற்சமயம் இடம்பெறும் யுத்தம் ஆரம்பமாகி எதிர்வரும் செவ்வாய்கிழமையுடன் 500 நாட்கள் பூர்;த்தியாகவிருப்பதாக, சர்வதேச தொண்டு அமைப்புக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றன.
இந்தக் காலப்பகுதியில் சூடானில் இடம்பெற்ற மோதல்களினால் 18 ஆயிரத்து 800இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
யுத்தத்தினால் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்கள். சூடானில் நிலவும் உள்நாட்டு யுத்தத்தினால் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடி 70 இலட்சத்தை தாண்டுகிறது.
இதில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களும் அடங்குகிறார்கள். 22 இலட்சம் சூடான் மக்கள் தற்சமயம் அருகிலுள்ள நாடுகளுக்கு சென்றிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ருக்கின்றன.
சூடான் யுத்தத்தினால் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் மோசமான பட்டினியை எதிர்நோக்கி வருவதாகவும் தன்னார்வ நிறுவனங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.