ஜனரஞ்சக அரசாங்கத்தை உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் – அனுரகுமார
ஜனரஞ்சக அரசாங்கத்தை உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். நாட்டின் வளங்களை பயன்படுத்தி, நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில்இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.