ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு சார்பில் தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று கூடிய தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.