ஜனாதிபதியின் பணிக்குழாம் சகல துறைகளிலும் பங்களிப்புச் செய்கிறது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30க்கு கூடியது.
இந்த நிலையில், மத்திய நிதிநிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பான தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே கொண்டுவந்த நிலையில், 2022ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டாகும் என குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமை இலங்கைக்கும் ஏற்பட்;டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 9ஆம் திகதி அன்று, நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியானது. அதனை பலர் இன்று மறந்துள்ளதாகவும் மதுர விதானகே குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதியின் பணிக்குழாம் சகல துறைகளிலும் பங்களிப்புச் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிடுகையில், பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.