ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளன – கஃபே
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வன்முறைகள் தெளிவாக குறைந்துள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலை நீடித்தால் எதிர்காலத் தேர்தல்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் மனாஷ் மக்கின் குறிப்பிட்டார்.
வன்முறைகள் அதிகம் பதிவாகவில்லை என்றாலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வேட்பாளர்களைத் தப்பெண்ணப்படுத்தும் பிரசாரம் இடம்பெற்று வருகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.