ஜி-20 அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்தியாவின் புதுடில்லி நகரில் இன்று சந்திக்கவுள்ளார்கள். உலகின் மிகவும் வலுவான பொருளாதார வல்லமை கொண்ட 20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இன்று உலகளாவிய ரீதியிலான நெருக்கடிகள் பற்றி கவனம் செலுத்தவுள்ளார்கள். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களோடு கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.