தனது ஆட்சியில் அரச நிர்வாகம் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்
தனது அரசாங்கத்தின் கீழ் அரச நிர்வாகம் டிஜிட்டல் மயமாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு பல்வேறு மாற்று வழிகளை அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தொடர்பாக உரிய தீர்வுகள் வழங்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டார்.
இதனிடையே, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தல் பிரசாரங்களுக்கு பொதுமக்களின் பணத்தை பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் நேற்று கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்த நாடு மீட்கப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரின் வெற்றி உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இளைஞர் சமுதாயத்திற்கு சிறந்த நாடு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.