தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரபு 12 மணியுடன் முடிவடைகிறது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகலரும் உரிய விண்ணப்பத்தை அருகில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும்.
தேர்தல் கடமைகளுக்காக விடுவிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
2024 பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இம்மாதம் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அடுத்த மாதம் முதலாம், நான்காம் திகதிகளிலும் தபால்மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவிருக்கிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலகங்களில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.