தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 8ஆம் திகதியுடன் நிறைவு.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்கிழமையுடன் நிறைவடைகிறது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் பொதுத் தேர்தலுக்கு மீண்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய விண்ணப்பங்களை, வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளமான WWW.Elections.GOV.LKடுக்குச் சென்று விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
உரிய விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலரிடம் கையளிக்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மீள பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.