தமது ஆட்சியில் விவசாயத்துறைக்கு மானியங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி
தமது அரசாங்க ஆட்சியில் அம்பாறை மாவட்டத்தில் பாரிய அளவான அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை மேம்படுத்துவதற்காக ஒரு மூடை உரத்தை 5 ஆயிரம் ரூபாவிற்குப் பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே, எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தைக் கூறினார்.
விவசாய உற்பத்திகளுக்கு நியாய விலை நிர்ணயிக்கப்படும். தற்போது நிலவும் அரிசி ஆலை மாபியாவில் இருந்து விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாத்து, நியாயமான விலைக்சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.