தமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே கிராமிய மக்கள் தீர்மானித்துள்ளதாக ஐ.தே. கட்சி தெரிவிப்பு
சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜனாதிபதி வேட்பாளர் என கிராமிய மக்கள் முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தம்பதெனிய தொகுதி அமைப்பாளர் பாரத தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திரு.தென்னக்கோன் உரையாற்றினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் பொதுஜன பெரமுன கட்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் திரு.விக்ரமசிங்கவிடம் உண்டு என்றார். எதிர்வரும் தேர்தலில் அனுபவமிக்க தலைவரை தெரிவு செய்வது மக்களின் பொறுப்பென அவர் கூறினார்.