Home » தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் ; தேசிய மகாநாட்டில் அறிவிக்கவுள்ள ஈரோஸ் ஜனநாயக முன்னணி!

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் ; தேசிய மகாநாட்டில் அறிவிக்கவுள்ள ஈரோஸ் ஜனநாயக முன்னணி!

Source

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தேசிய மகாநாட்டில் அறிவிக்கவுள்ள ஈரேஸ் ஜனநாயக முன்னணி தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதென்பது முக்கியமான விடயம். எழுந்தமானமாக அதற்கான பதிலை கூறிவிடமுடியாது அந்த தெரிவு தமிழாபேசும் சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலுள் சாதகபாதக நிலைகளை ஆராய்வதோடு தமிழ் சமூக அரசியல் ஆய்வாளர்களின் கருத்துகளையும் அறிந்து கட்சியின் பொதுக்குழுவில் விவாதித்து எமது தீர்மானத்தை மக்கள் முன் சமர்ப்பிப்போம் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் திருமலை மாவட்டத் தலைவருமான கதிர் திருச்செல்வம், பொருளாளர் க.சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் இணைந்திருந்தனர்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாடு தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கடியாலும் அரசியல் ஸ்திரமின்மையாலும் மக்களின் வாழ்நிலை சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்பேசும் மக்கள் ஒடுக்குமுறைகளாலும் இனப்பாகுபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் சிங்கள் மக்கள் உட்பட அனைவரும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றது.

நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் மூன்று வேலை உணவருந்தி வெகு நாட்களாகிவிட்டது இளைஞர்களினதும் மக்களினதும் போராட்டத்திற்கு தாக்குபிடிக்கு முடியாமல் இருந்தவர் நாட்டைவிட்டு ஓடியநிலையில் இலங்கை மீட்டெடுக்கப் போவதாக கூறிக்கொண்டு அவசர அவசரமாக நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

ஆனால் இருந்ததைவிட தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது அவருடைய ஆட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் கேள்விக்குள்ளாக்கும் படுகிறது தமிழ்பேசும் மக்களின் பூர்வீக காணிகள் “தொல்பொருள்” என்ற பெயரில் கபடத்தனமாகஸகபளிகரம்செய்யப்படுகின்றது தமிழ் மக்களிடம் ஆயுத பலம் இருந்தபோது பிராந்தியங்களின் ஒன்றியம் 13+ என்றெல்லாம் பேசியவர்கள் இன்று 13யும் தரமறுக்கின்றனர்.

இன்னொரு பக்கம் இந்தநாட்டை பொருளாதார ரீதியாக தூக்கிய நிறுத்திய மலையகத்தமிழர்களின் வரலாறு இந்த நாட்டில் 200 வருடங்களை கடந்தும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ந்துவதிலும் காணிவுரிமையை வழங்குவதிலும் இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்கின்ற அரசாங்கங்கள் அக்கறைக்காட்டுவதாக தெரியவில்லை இந்த நிலையில் வடக்கு கிழக்கு மலையகத்தமிழர்களை ஒருங்கிணைத்து செயற்படும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தன்னுடைய பொறுப்பை நன்கு உணர்கிறது.

ஆகவே தான் 1975ம் ஆண்டு தோழர் இரத்தினசபாபதி அவர்களால் உருவாக்கப்பட்ட ஈரோஸ் அமைப்பு ஆயுத போராட்டக்காலத்திலும் சரி 1987ம் ஆண்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்துக்குள் இணைத்துக்கொண்டு ஓதும் சரி 1991ம் ஆண்டுக்கு பின் தமிழ்தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு இடையூறு செய்யாமல் மெளனித்திருந்த காலத்திலும் சரி பின் 2015 மீண்டும் ஈரோஸ் அமைப்பின் அரசியல் கட்சியாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியை பிரகடனப்படுத்தியபோதும் சரி நாம் மக்கள் பக்கம் நின்று எமது முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.

அதே போன்றே இன்றைய நெருக்டியான காலத்திலும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் ஒரு பொறுப்புவாய்ந்த அரசியல் கட்சியாக மக்களின் நலனை கருத்திற்கொண்டு எமது அரசியல் தீர்மானத்தை அறிவிப்போம் தமிழ்பேசும் மக்கள் அரசியல் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்திருந்த நிலையிலேயே மாற்று அரசியல் சக்தியாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியை பிரகடனப்படுத்தினோம்.

கடந்த அரசியல் செயற்பாடுகளில் திருப்பதியடைந்த தேர்தல்கள் ஆணைக்குழு ஈரோஸ் ஜனநாயக முன்னணியை அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளது ஈரோஸ் அமைப்பின் தொடர்ச்சியாகவே ஈரோஸ் ஜனநாயக முன்னணி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கடந்த 09வருடங்களாக மெதுவாக வென்றாலும் வடக்கு கிழக்கு மலையகத்தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தவும் அரசியல் உரிமைகளை வெற்றெடுக்கவும் சரியான திசையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றோம் ஆகவே இந்த நாட்டில் இருக்கின்ற வடக்கு கிழக்கு, மலையகத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈரேஸ் ஜனநாயக முன்னணி தன்னுடைய காத்திரமான அரசியல் வீரியமாக முன்னெடுக்கும்.

மேலும் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் பேசும் மக்கள் உட்பட இலங்கை மக்களுக்கு பெருத்த நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கையில் புதிதாக அதனைவிடவும் மோசமான சட்டத்தை இலங்கையில் கொண்டுவருவது என்பது இலங்கை மக்களது ஜனநாயக உரிமையை பறிப்பதோடு மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் இருக்கும் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களது எதிர்ப்பை காட்டுவதற்க முடியாது.

கையறு நிலையில் மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகலாம் ஆகவே மக்களை ஒடுக்குகின்ற அனைத்து செயலற்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை அதோடு 2025 தேர்தல் ஆண்டாக எதிர்வு கூறப்படுகின்றது மக்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர் இந்தி நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று அனுமானிக்க முடியாத அரசியல் சூழல் இருக்கின்றது அதே நேரம் இன்னொருபக்கம் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாகவு பேசப்படுகின்றது.

இந்த தேர்தலில் ஜனாதிபதியை தெரிவுசெய்வதில் தமிழ்மக்களின் வாக்குகள் மிக பெறுமதியாக இருக்கப் போகின்றது இதை எவ்வாறு நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளாம் என ஆராயவேண்டும் ஆகவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மக்களோடும் மக்கள் நலன்சார்ந்த அமைப்புகளோடும் கலந்துரையாடி கட்சியின் கருதி முடிவை அறிவிப்போம் அரசாங்கத்தினுடைய வரி அதிகரிப்பானது ஒட்டுமொத்த மக்களையும் எதிரான கருத்துடையவர்களாக மாற்றியிருக்கிறது மக்கள் மீது மேலதிக சுமையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இந்த சுமையைக் குறைப்பதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கவேண்டும் அவர்கள் அதை செய்யவில்லையென்றால் அவர்கள் மது மக்கள் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தயாராகவேண்டும் மக்களோடு ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் கைகோர்த்துக்கொண்டு செயற்படும். மக்கள் விரோத செயற்பாடுகளை ஆட்சியாளர்களோ வேறு யாரோ செய்கின்ற போது சமூக ஊடகங்களே மக்கள் மத்தியில் அதை கொண்டு செல்கின்றன.

ஆகவே சமூக ஊடகங்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படுகின்ற இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால் மக்களுடைய கருத்துச்சுதந்திரத்தை நிகழ் நிலை காப்புச் சட்டம் பறிக்கின்றது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடனான செயற்பாட்டில் எமது முன்னணியும் கைகோர்க்கும் அதே நேரத்தில் வடக்கு, கிழக்கு, மலையத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைப்பது தொடர்பாகவும், மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏனைய முற்போக்கு அரசியல் சக்திகளோடும், தென்பகுதியில் செயற்படும் சகோதர சங்கள முற்பொக்கு சக்திகளோடும் இனைந்து தமிழ்பேசும் நியாயமான கோரிக்கைகளை வலுப்படுத்துவோம்.

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்கின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கப் போவதாக தேர்தல் காலம் வரும் போது அறிவிப்பதும் பின் கிடப்பில் போடுவதும் கடந்த கால கசப்பான வரலாறாகும் இது ஒரு தேர்தல் கால செயற்பாடாக இல்லாமல் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் செயற்பட வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துணிந்து முடிவெடுக்கூடிய ஜனாதிபதி ஒருவரை இந்நாடு பெற்றாகவேண்டும்.

அதை மக்களே சாத்தியமாக்கவேண்டும் இந்த நேரத்தில் ஆரம்ப காலத்திலிருந்து ஈரோஸ் அமைப்புடன் இணைந்திருந்த அத்தனை தோழர்களையும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியோடு இணைந்துக்கொள்ளுமாறு பகிரங்க அழைப்பினை விடுக்கிறோம் அதோடு எமது அரசியல் செயற்பாட்டுக்கு இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களின் ஒத்துழைப்புகளை வேண்டுகிறோம்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image