திரு. விக்ரமசிங்கவின் வெற்றிக்காக செயற்படுவதாக இ.தொ.கா. தெரிவிப்பு
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு முன்வைக்கக்கூடிய தலைவரைத் தெரிவு செய்வதே நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சவால் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் இலங்கையர்கள் என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரம் தொடர்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக அவரின் வெற்றிக்காக சகல மக்களும் ஒன்றிணைந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. இலங்கை மக்கள் மீண்டும் வரிசைகளில் காத்து நிற்பதற்குத் தயாரில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் இடம்பெறும் பட்சத்தில் அதன் அழுத்தத்தையும் பொருளாதாரச் சுமையினையும் மக்களே அனுபவிக்க நேரிடும். இதன் காரணமாக வேறு தரப்பிற்கு வாக்களித்து, பரீட்சித்துப் பார்ப்பதற்கு மக்கள் தயாரில்லை என்றும் ஆளுனர் தெரிவித்தார்.