தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெறச்செய்ய மக்கள் தாமாகவே முன்வந்துள்ளார்கள்
தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெற மக்கள் தாமாகவே முன்வந்துள்ளதாக அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிலர் வாக்குகளை பெற மக்கள் முன் மன்றாடி வருகின்றனர். கந்தளாய் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த அரசாங்கமும் நாட்டை நிர்வகிக்க முடியும். ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே தமது நோக்கம் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அதற்காக சில வலுவான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அதற்கு மக்களின் ஆதரவு தேவை. யாரையும் பழிவாங்கும் எண்ணம் தமக்கு இல்லை என தெரிவித்த அவர், நாட்டை மீட்டெடுப்பதே பிரதான நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.