தேர்தல் கடமைகளை மீறும் அரச அதிகாரிகள் பற்றி முறையிடலாம் மனித உரிமைகள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது பற்றிய முறைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளும் என, மனித உரிமை ஆணையாளர்கள் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.
பொலிஸார் அடங்கலாக எந்தவொரு அரச உத்தியோகத்தரும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு சார்பாக அல்லது எதிராக செயற்படுவதாக கண்டறிந்தால், அதுபற்றி தமக்கு அறிவிக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளை தொலைபேசி மூலமாகவோ தொலைநகல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். தொலைபேசி இலக்கம் 076-791-4696. பெக்ஸ் இலக்கம்
011-250-5566 என்பதாகும்.
தேர்தல் சமயத்தில் பொலிஸாரும் அரச அதிகாரிகளும் செயற்பட வேண்டிய விதம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வழிகாட்டல் கோவை ஒன்றை வெளியிட்டுள்ளது.