தோல்வியிலிருந்து தப்பிக்க எதிர்கட்சிகள் பல்வேறு திட்டங்கள் – அனுரகுமார
மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் சரியாக நிறைவேற்றப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது எதிர்கட்சிகள் தோல்வியில் இருந்து தப்பிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருதங்கடவல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
சில கட்சிகள் வேறு கட்சிகளுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் உறுதியான வெற்றியைக் கண்டு ஏனைய கட்சிகள் அச்சமடைந்துள்ளதாக திஸாநாயக்க தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கும் வாக்கை, அவருக்கு வழங்கும் வாக்காக சமன்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி முயற்சித்த போதிலும்,
அவ்வாறான எந்தவொரு வாக்கையும் தாம் விரும்பவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.