நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம், கண்டி எஸல பெரஹராவின் கும்பல்பெரஹர இன்று
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூரி கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ நிகழ்வு நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 25 நாட்களுக்கு ஆலயத்தில் மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தின் 37 ஆவது ஆடிப்பூர மகோற்சவ நிகழ்வின் பஞ்சரதத் தேர்த் திருவிழா இன்று இடம்பெறவிருக்கின்றது. ஆலயத்தின் தீர்த்தத் திருவிழா நாளை நடைபெறும்.
கும்பல்பெரஹர இன்று:
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எஸல பெரஹராவின் கும்பல்பெரஹர இன்று ஆரம்பமாகிறது.
இன்று மாலை 6 மணி 6 நிமிடம் என்ற சுபவேளையில் கும்பல் பெரஹர வீதியுலா வரவிருக்கின்றது.
கண்டி எஸல பெரஹராவின் பாதுகாப்பிற்கென 5 ஆயிரத்து 500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இம்முறை அதிகளவிலானோர் கண்டி எஸல பெரஹராவை பார்வையிடுவார்கள் என்று பொலிசார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.