நாட்டின் வரி வருமான அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் நாட்டின் அரச வருமானம் 40.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சி காணப்படுவதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் இரண்டு இலட்சம் கோடியே 55 ஆயிரத்து 779 ரூபாவாகும்.
அந்த காலப் பகுதியில் மொத்த வரி வருமானம் இரண்டு லட்சம் கோடியே 34 ஆயிரத்து 853 கோடி ரூபாவாகும்.
இதில் 62 ஆயிரம் கோடியே 467 ரூபாய் வருமான வரியாகவும், ஒரு லட்சம் கோடியே 42 ஆயிரத்து 134 ரூபாய் பொருள் மற்றும் சேவைகளுக்கு வரியாக பார்க்கப்படுகிறது.
வெட் வரி வருமானம் 84 ஆயிரம் கோடியே 248 ரூபாவாகும். இது 87.2 சதவீத வளர்ச்சியாகும். அத்துடன், கலால் வரி வருமானம் 38 ஆயிரம் கோடியே 574 ரூபாவாக காணப்படுகிறது.
இது 42 சதவீத வளர்ச்சியாகும். வரி அல்லாத வருமானம் 20 ஆயிரம் கோடியே 926 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இது 31.7 சதவீதம் அதிகரிப்பாகும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருட இறுதிக்குள், அரச வருமானம் நான்கு லட்சத்து பத்தாயிரம் கோடியே 700 ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.