செலவு மிகுந்த காபெட்களுக்குப் பதிலாக நவீன தொழி;நுட்பம் கொண்ட செலவு குறைந்த வீதி நிர்மானத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆய்வுகளையும், பரீட்சார்த்த நடவடிக்கைகளையும் விரைவு படுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டிலுள்ள வீதிக் கட்டமைப்பை தரமானதாக அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து கூட்டிணைந்த வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.