நாட்டை அழித்த குழுவொன்று மீண்டும் நாட்டைக் கட்டுப்படுத்தக் கோருவதாக குற்றச்சாட்டு.
நாட்டை அழித்த குழுவொன்று மீண்டும் நாட்டை நிர்வகிக்க கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் புத்திசாதூரியமாக செயற்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி பலமான மக்கள் திரண்டு வருகின்றனர்.
உலகில் பெரும்பான்மையான நாடுகளுடன் அரசாங்கம் என்ற ரீதியில் உறவுகளை கட்டியெழுப்பக்கூடிய நட்புறவான வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்றும் ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டார்.