நாட்டை கட்டியெழுப்பும் பணி 21ஆம் திகதிக்குப் பின் ஆரம்பமாகும்.
76 வருடங்கள் பின்னோக்கிச் சென்ற நாட்டின் மீள்கட்டுமானம், எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னர் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் பலம், ஊடக பலம், குண்டர் பலம் என்பன அரசாங்கத் தேர்தல்களில் இதுவரை பயன்படுத்தப்பட்டன. ஆனால் அதற்காக தமது கட்சி, மக்கள் பலத்தை பயன்படுத்தவுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
மெல்சிறிபுர நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும். போதைப்பொருள் பாவனை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் எதிர்பார்க்கும் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த எதிர்வரும் சனிக்கிழமை சிறந்த சந்தர்ப்பம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.