Home » நாட்டை கட்டியெழுப்புவதற்கு தனியார் பிரிவின் பங்களிப்பு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

நாட்டை கட்டியெழுப்புவதற்கு தனியார் பிரிவின் பங்களிப்பு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Source
Share Button

நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் பொறுப்பு கூற வேண்டும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களில் செயற்படுமிடத்து, நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ரியாதிலுள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் தெரிவித்தார். சவுதியில் தொழில் புரியும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு உரிய தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதகாவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பினால் வழங்கப்படும் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகளை சவுதி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்பவர்களின் பாதுகாப்பு முக்கியமாகும். வெளிநாட்டு தொழில் வாய்ப்பு விடயத்தில் காலங்கடந்த சட்டங்களை நீக்கி, புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image