நாட்டை முன்னேற்றிச் செல்ல ஒருமைப்பாடு அவசியம்! ஐ. தே. கட்சி
தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டை முன்னேற்றுவதற்கு சகலரும் ஐக்கியப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு தேசிய மட்டத்திலான இணக்கப்பாடு அவசியம். இந்த இணக்கப்பாடு சாத்தியப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு நிலைக்குள் தள்ளப்படுமென திரு.அபேவர்த்தன கூறினார்.
அவர் காலியில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றினார்.