நிர்மலா சீதாராமன் யாழ் விஜயம்!
இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர்
நேரில் சென்று வரவேற்றனர்.
இந்திய அமைச்சருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழு வருகை தந்துள்ளது.
நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்திய அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.