பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக மொஹம்மட் யூனுஸ்
நொபெல் பரிசு வென்ற பொருளியல் நிபுணர் மொஹம்மட் யூனுஸ், இன்று இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக சத்தியப் பிரமாணம் செய்வார் என பங்களாதேஷின் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
மொஹம்மட் யூனுஸ் பாரிஸ் நகரில் இருந்து திரும்பியதும் சத்தியப் பிரமாண வைபவம் இடம்பெறும் என தளபதி ஜெனரல் வாக்கீர் உல்-ஸமான் குறிப்பிட்டார்.
பிரதம மந்திரி ஷேய்க் ஹஸீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இடைக்கால தலைவரின் நியமனம் இடம்பெறுகிறது.
அரச தொழில் வாய்ப்பு கோட்டாவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், பெரும் எதிர்ப்பு இயக்கமாக பரிணமித்ததை அடுத்து ஹஸீனா விலகி இருந்தார்;.