பல மாவட்டங்களில் நெற்செய்கையில் ஒருவகை மஞ்சள்புள்ளி நோய் பரவல்
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நெற்செய்கையில் பரவிவரும் மஞ்சள்புள்ளி நோய் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தேசிய வானொலிக்கு தெரிவித்தார். யாழ்ப்பாணம், அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள நெற்செய்கைக்கு இந்நோய் பரவியுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில், தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவொன்றுடன், அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கலந்துரையாடல் ஒன்று அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது. இதன் பின்னரே இதற்கான விரைவான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.