பாராளுமன்ற தேர்தல்: தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் விரைவில்
பாராளுமன்ற தேர்தலுக்காக தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து எதிர்வரும் எட்டாம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள், பொதுத் தேர்தலுக்கு தபால் மூல வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள,; ஏதாவது காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டிருக்குமிடத்து, குறித்த விடயத்தை சரிசெய்து தபால் மூல வாக்களிப்பிற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்தார்.