பிரதமர் – சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.