பிறிக்ஸ் மாநாட்டிற்கு வெனிசுவெலா ஜனாதிபதிக்கு அழைப்பு
ஒக்டோபர் மாதம் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பிறிக்ஸ் மாநாட்டிற்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின், நிக்கொலஸ் மதுரோவிற்கு கடிதமூலம் தெரியப்படுத்தியிருந்தார்.
இதன்போது வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் கேஸ் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உரிமையை பிறிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு வழங்க மதுரோ நடவடிக்கை மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு நாடுகள் தமது நாட்டிற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வருவதால் இந்தத் தீர்மானம் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என வெனிசுலா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த மாத இறுதியளவில் உக்ரேனுக்கும் எவ்.16 ரக அமெரிக்க தாக்குதல் விமானங்கள் பத்து கிடைக்கப்பெற்றிருப்பதாக தி எக்கொணமிக் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, மியன்மாரில் பாரிய அரசியல் கட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவதற்காக ரஷ்யாவின் உதவியை கோரியுள்ளது.