புதிய கடவுச்சீட்டு விநியோக பணிகள் நாளை முதல் ஆரம்பம்.
புதிய கடவுச்சீட்டு விநியோக பணிகள் நாளை முதல் ஆரம்பமாகும் என்று அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஏற்கனவே விலைகோரலுக்கு இணங்க முன்வைக்கப்பட்ட கொள்வனவு உத்தரவுக்கு அமைய முதலாவது தொகை கடவுச்சீட்டு அட்டைகள் நேற்றையதினம் இலங்கையை வந்தடைந்தன.
இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்று இருக்கின்றபடியால், அதனை தற்சமயம் அமுல்படுத்த முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்தத் தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் அதுபற்றி கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.