புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பாடசாலைகளுக்குஇ இடை நடுவில் ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பாடடசாலைகளுக்கு சாதாரண தர பரீட்சை வரையிலான இடை வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறகளை பெறும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தவிர்பது இதன் நோக்கமாகும். தரம் 7, 8 வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதன் மூலம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
