பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி மதியம் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
புதிய பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ளது.