பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கால அவகாசம்.
வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐந்து வருட கால அவகாசம் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து பொருளாதார மாற்றத்திற்கு அடித்தளமிட்டதன் மூலம் வாக்கு கோரும் உரிமை தமக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
உற்பத்தியை அதிகரித்து அரச வருமானத்தை அதிகரிப்பதே தமது கொள்கை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.