பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் போது உழைக்கும் மக்கள் மீது உச்ச அழுத்தத்தை திணிப்பது தவறான செயல் என நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற அவர் தெரிவித்தார்.
ஏற்றுமதியை அதிகரிப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும். தமது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டங்கள் உள்ளதாக என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இந்நாட்டில் உள்ள நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்துறையினர் வழங்குகின்றனர். அந்த நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டன எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.