பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளாது
புதிய ஜனாதிபதியின் நியமனம் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தாது என சர்வதேச கடன் ஆய்வு முகவர் நிறுவனமான மோடீஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போதுள்ள கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
கொழும்பு பங்குச் சந்தையும் ஒரு உற்சாகமான முதலீட்டு செயல்முறையைக் காட்டுகிறது. கடந்த சில நாட்களாக அனைத்துப் பங்குகளின் விலை சுட்டெண்களும் அதிகரித்துக் காணப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.