பொலிஸ் திணைக்களத்தின் நிருவாகப் பிரிவின் பிரதானியாக பதில் கடமையாற்ற சிரேஷ்ட பிரிதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமனம்
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, பொலிஸ் திணைக்களத்தின் நிருவாகப் பிரிவில் பதில் கடமையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் பணியாற்றிய நிலந்த ஜெயவர்தன கட்டாய விடுமுறையில் சென்றதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே, லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழவின் தீர்மானத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.