மக்களை மையப்படுத்திய அரசாங்கத்தை அமைக்க தேசிய மக்கள் சக்தி தயார் – அனுரகுமார
மக்களின் சுபீட்சத்தை கருத்திற் கொண்டுஇ மக்களை மையப்படுத்திய அரசாங்கம் அமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களை பட்டினியால் வாட்டி வதைத்து அரசுகளை அமைப்பதில் அர்த்தமில்லை. கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான ஒரே வழி உயர்கல்வி பெறுவதுதான் எனுவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெற்றோருக்கு சுமையாக இருக்கும் கல்வியை பெற்றோரிடம் இருந்து விடுவித்து அரசின் பொறுப்பாக மாற்ற வேண்டும்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளில் பாடசாலை கல்வியை கட்டாயமாக்க புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு தொழிலுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
தற்போது நாட்டில் விவசாயம் மரியாதை பெறவில்லை. விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். விவசாய தொழில் இலாபகரமான வருமானம் கொண்ட தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்புடும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.