Home » மக்கள் ஆணையின் மூலம் நாடு அபிவிருத்தி செய்யப்படும் – எதிர்க்கட்சித் தலைவர்.

மக்கள் ஆணையின் மூலம் நாடு அபிவிருத்தி செய்யப்படும் – எதிர்க்கட்சித் தலைவர்.

Source

உண்மையான ஆணையின் ஊடாக நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்ல தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பலவந்தமாக ஆட்சியை தக்கவைக்க செயற்படும் குழுவும் வன்முறையால் நாட்டை அழித்த குழுவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்ற சரியான அணி தன்னிடம் இருப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தற்போது பல்வேறு தலைவர்களின் தவறான முடிவுகளால் இளைஞர் சமுதாயமும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் சந்தை, கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக பாதுகாப்பு என்பனவும் இழக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image