மக்கள் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியதாக ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்த்து மக்கள் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களின் எதிர்காலத்திற்காக வாய்ப்புக் கோரும் அரசியல்வாதிகளிடம் நாட்டைக் கையளிக்கும் சந்தர்ப்பம் இதுவல்ல. கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.