மடு அன்னையின் ஆவனித் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
வரலாற்றுச் சிறப்புமிக்க, மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களின் வசதி கருதி தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை அ. ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழா, கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானது.
ஓன்பது தினங்களுக்கு மாலை திருச்செபமாலை, நற்கருணை ஆராதனை, திருப்பலி என்பன இடம்பெறும்.
எதிர்வரும் 14ஆம் திகதி மாலை விசேட நற்கருணை ஆராதனை இடம்பெற்று, பக்தர்களுக்கு நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்படும்.
மறுநாள் காலை, 6.15ற்கு திருவிழாத் திருப்பலி ஆயர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.