முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை
கடந்த அரசாங்கத்தினால் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 32 உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில், 28 வாசஸ்தலங்களே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்
எஸ்.அலோக பண்டார தெரிவித்துள்ளார்.
அவற்றில் 14 வாசஸ்தலங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து, ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், ஏனைய 14 உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.
அவற்றை ஒப்படைக்குமாறு மீண்டும் நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.