முன்னாள் அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னான்டோ கைது!
முன்னாள் அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னான்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாததை அடுத்து அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.
இவ்வாறான நிலையில் வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னாள் அமைச்சர் இன்று சென்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.