முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகருக்கு 45 ஆயிரம் டொலர் மாதாந்தச் சம்பளம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக செயற்பட்ட நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்மிற்கு மாதாந்தம் 45 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக அரச கணக்காய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை கண்காணிப்பதற்கான ஆலோசகர் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பளம் ஒரு பாரிய தொகையாகும்.
நாடு கடுமையான பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் டொலர் தட்டுப்பாடு காணப்பட்ட போது இவ்வாறு பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரச கணக்காய்வுப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான முறையில் மேலும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.