Home » முழுதும் சரிந்த பொருளாதாரம் மீண்டு வருகிறது ் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை

முழுதும் சரிந்த பொருளாதாரம் மீண்டு வருகிறது ் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை

Source

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய முடிந்தது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மைப் பற்றாக்குறையானது 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்த முடிந்தது என்றும், இது சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் 6 ஆவது தடவையாக இலங்கையால் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் 194,495 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2023 ஆம் ஆண்டில் 1,487,303 ஆக உயர்த்த முடிந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு முழுதும் சரிந்த பொருளாதாரம் 2023 இல் முன்னேற்றத்தை அடைந்திருப்பது தற்செயலாக அல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியன் மூலமே அந்த நிலை ஏற்பட்டது.

பல தசாப்தங்களாக அவதிப்பட்ட விவசாயிகளுக்கு செலுத்தும் மரியாதையாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உரித்து வேலைத்திட்டத்தின் ஊடாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தாம் இழந்த காணி மற்றும் வீட்டு உரிமைகளை மீண்டும் வழங்கியமை வரலாற்று மற்றும் புரட்சிகரமான நடவடிக்கையாகும்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு முழுவதும் 4917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் கொடுப்பனவுகளை துரிதமாக செலுத்தும் வேலைத்திட்டம் அமுலில் உள்ளதாகவும், அனைத்து மருத்துவ உதவிகளும் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதற்கு பதிவு செய்தோர் தொகை 437,547 ஆக இருந்ததோடு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதனை 1,000,029 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 130% அதிகரிப்பைக் காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தி முன்னோக்கிச் செல்கையில் பொருளாதாரம் தொடர்ந்தும் ஸ்திரப்படும் நிலையில், வரிச்சுமை குறைக்கப்படும் எனவும் அதேவேளை வற் வரியை திருத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை அத்திவாரமாகவும், கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையில் திருப்புமுனையாகவும் அமையும்.

இந்த ஆண்டு 2% – 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஐ.எம்.எப் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன கணித்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் இதனை 5% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image